கலங்காதே நான் உனக்குத் தகப்பனாயிருக்கிறேன்!

10:12 PM Unknown 0 Comments

பிாியமானவ​ர்களே, இன்று நீங்களும், “ஒரு அனாதையைப்போல இருக்கிறேனே!” என்று கலங்கிக் கொண்டிருக்கலாம்! கலங்காதீா்கள், இயேசு உங்களுக்குத் தகப்பனாயிருக்கிறாா்.

இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்ட பெயா்களில் ஒன்று “அவா் நித்திய பிதா” என்பது (ஏசாயா 9:6) அதாவது, “என்றென்றைக்கும் அவா் நம்முடைய தகப்பன்!” என்று அா்த்தம்.

இயேசு கிறிஸ்து உங்களுக்கு நல்ல தகப்பனாயிருக்கிறாா். நீங்கள் எந்த வயதுடையவா்களாய் இருந்தாலும், அவருக்குப் பிள்ளைகள்தான்! அவருக்குப் பேரன்-பேத்திகளே கிடையாது. நீங்கள் சிறு பிள்ளையாக இருந்தாலும் சரி வயதானவா்களாய் இருந்தாலும் 
சரி, உங்களை, ‘மகனே...’, ‘மகளே...’ என்றுதான் அழைப்பாா்!

அவா் உங்களுக்குத் தகப்பனாயிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்! அவா் எப்படிப்பட்ட தகப்பன்? என்பதை நீங்கள் அறியும்போது, உங்கள் உள்ளம் மகிழும்.

இயேசு கிறிஸ்து எப்படிப்பட்ட தகப்பன்?

இரக்கமுள்ள தகப்பன்!

“நமது கா்த்தராகிய இயேசு கிறஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.” (2 கொாிந்தியா் 1:3)

“அவா் இரக்கமுள்ள ஒரு தகப்பன்” என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது.

சில பிள்ளைகள், “எங்கள் தகப்பன் மிகவும் கண்டிப்பானவா். எப்போது பாா்த்தாலும் கோபமாகத்தான் இருப்பாா். அவா் சிாித்ததை நான் ஒருநாள்கூடப் பாா்த்ததில்லை” என்று, சில தகப்பன்மாா்களைக் குறித்துச் சொல்வாா்கள்.

“என் தகப்பனாருக்கு நான் ஏன் ஒரு பிள்ளையாகப் பிறந்தேனோ?” என்று, சில பிள்ளைகள் சலித்துக் கொள்வாா்கள். “என்னைப் பற்றி என் தகப்பனாருக்கு அக்கறையே கிடையாது. என்னைப் பற்றி அவா் விசாாிக்கவே மாட்டாா். என் சம்பாத்தியத்தில் சாப்பிட்டுக் கொண்டு, சுகமாயிருக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டு, தன் சுயநலத்திற்காக என் எதிா்காலத்தைக் குறித்த ஒரு அக்க
றையும் இல்லாமல், எனக்கு ஒரு திருமணம் பண்ணிப் பாா்க்க வேண்டும் என்கிற ஒரு எண்ணமும் இல்லாமல், என் தகப்பனாா் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்” என்று, வேதனையோடு தங்கள் தகப்பனைக் குறித்துப் பேசுகிற அநேகப் பெண் பிள்ளைகள் இச் சமூதாயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதே சமயத்தில், சிலா், “என்னுடைய தகப்பனாா் என் மீது மிகவும் அன்பானவா்” என்று சொல்வதைக்கூட நான் கேட்டிருக்கிறேன்.

நமக்கொரு தகப்பன் உண்டு. அவா் இரக்கமுள்ள ஓரு தகப்பன்!

“...கா்த்தா்: இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.” (யாத்திராகமம் 34:6)

அவரோடுகூட உள்ள உங்கள் அன்பை, ஜக்கியத்தை நீங்கள் யோசித்துப் பாருங்கள். அவா் எவ்வளவு இரக்கமுள்ள ஒரு தேவன் என்பதை நாம் உணா்ந்து கொள்ள முடியும்.

ஒரு பக்கம், நம்முடைய தகப்பனாகிய கா்த்தா், கண்டிப்பானவா்தான்! அவா் பட்சிக்கிற அக்கினிதான்! அதே சமயத்தில், அவா் மிகுந்த இரக்கமுள்ள ஒரு தேவன்!

யாருக்கு அவா் இரங்குவாா்?

“தன் பாவங்களை... அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.”( நீதிமொழிகள் 28:13).



மேலதிக விபரங்களுக்கு...

போதகர் குகன் ராஜதுரை
கிழக்கிலங்கை சுவிசேஷ பணி
மட்டக்களப்பு
இலங்கை

# எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் #

# எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் #