இதோ நமக்குச் சமாதானம்

பாவத்தின் பாரம், வியாதியின் வேதனை, சுற்றி நெருக்கும் பிரச்சினைகள் இவைகளால் கலங்கித் தவிக்கும் சமுதாயத் தையே நாம் இன்று பார்க்கின்றோம். பஞ்சு மெத்தையில் புரளும் பெரிய செல்வந்தன் முதல் கூலி வேலை செய்யும் பரம ஏழை வரை “சமாதானம் இல்லையே” என ஏங்கித் தவிப்பதைக் காண்கின்றோம்.

கலங்காதே நான் உனக்குத் தகப்பனாயிருக்கிறேன்!

பிாியமானவ​ர்களே, இன்று நீங்களும், “ஒரு அனாதையைப்போல இருக்கிறேனே!” என்று கலங்கிக் கொண்டிருக்கலாம்! கலங்காதீா்கள், இயேசு உங்களுக்குத் தகப்பனாயிருக்கிறாா்.

இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்ட பெயா்களில் ஒன்று “அவா் நித்திய பிதா” என்பது (ஏசாயா 9:6) அதாவது, “என்றென்றைக்கும் அவா் நம்முடைய தகப்பன்!” என்று அா்த்தம்.

அன்பு சகோதரனே! சகோதரியே!

அன்பு சகோதரனே! சகோதரியே! உன்னோடு சில நிமிடங்கள் நான் பேச விரும்புகிறேன்.

இன்றைக்கு இப்பூமியில் வாழும் எமக்கு நாளைக்கு என்ன செய்வது? எப்படி வாழ்வது? என்றெல்லாம் எமக்கு நம்பிக்கையாய் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாத சமூகத்தில் நம்பிக்கையை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதைப் பார்க்கும் போது எங்கே யாரை நம்புவது என்றெல்லாம் தோன்றுகின்றது.

வேலைத்தளங்களில் குளறுபடிகளும் கணவன், மனைவி, பிள்ளைகளுக்கு இடையில் நம்பிக்கைத் துரோகங்களும் ஒருவரால் ஒருவர்   நம்பிக்கை இழந்தவர்களாய் இருக்கின்றோம். கடையில் பொருட்களை நம்பிக்கையுடன் வாங்கி வீடு வந்ததும் அது கலப்படம் அல்லது தரம் குறைந்ததாய்க் காணப்படும் போது, ஒருவரால் ஒருவர் நம்பிக்கை இழந்தவர்களாகிப் போய் விடுகிறோம்.

மனங்கசந்து வேதனைப்படுகிறோம். ஒருவர் மற்றவரிடம் பொறுப்புக்களைக் கொடுக்கவே அஞ்சுகின்ற இக்காலத்தில் எங்கே அந்த நம்பிக்கையான நபர் என நீங்கள் உங்கள் வாழ் நாள் எல்லாம் ஏங்கித் தவிக்கும் நேரத்தில், நான் உங்களுக்கு அந்த நம்பிக்கையானவரை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அவர் தான் இன்றைக்கு 2015 ஆண்டுகளுக்கு முன் இந்த நம்பிக்கையிழந்த பூமியிலே மனுமைந்தனாக நம்பிக்கையின் ஒளியாக சர்வ உலகத்திற்கும் இரட்சகராகவும் கன்னி மரியாளின் வயிற்றில் தேவமைந்தனாகக் கொட்டும் பனியிலும், குளிரிலும் மாட்டுத் தொழுவத்திலே வந்து பிறந்தார். அவர் வளர்ந்து எம் பாவங்களையும், துக்கங்களையும், நோய்களையும் சுமந்து (ஏசாயா 53:4) மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிருடன் எழுந்து இன்றைக்கும் ஜீவிக் கிறார். அவருடைய பிறப்பின் மூலம் நம்பிக்கையிழந்த எமக்கு நம்பிக்கை வந்தது.

இந்த செய்தி உலகம் முழுவதும் சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவரது பிறப்பின் செய்தி, சகலருக்கும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

ஆகவே அன்புருவானவர் சொல்லுவது நான் உங்களுடனே இருக்கிறேன். நன்மை செய்வேன். ஆறுதல் தருவேன். நிம்மதி தருவேன். இளைப்பாறுதல் தருவேன். என்னிடம் வாருங்கள் என்று (மத்தேயு 11:28) அன்போடு அழைக்கிறார். நம்பிக்கையுடன் ஓடி வா கலங்காதே மகனே, மகளே நம்பிக்கையிழந்து யார் என்னை நேசிப்பார் யாரிடம் ஆறுதல் அடைவேன் என்று ஏங்கித் தவிக்கின்றாயோ இயேசுகிறிஸ்து உன்னைக் காண்கிறார். உன் கண்ணீரைத் துடைக்கிறார். உன்னை வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையுடன் வழிநடத்துவார். உன் நம்பிக்கை வீண் போகாது. தேவன் உன்னை அழைக்கிறார். இன்றே தீர்மானம் செய்.

நீ அவரிடம் வருவதற்கு இன்று தீர்மானிப்பாயானால் இந்த சிறிய ஜெபத்தை அவரிடம் ஏறெடு.

அன்புள்ள இயேசுவே நான் நிம்மதி, நம்பிக்கை இழந்த மனிதன். எனக்கு புது நம்பிக்கையையும் வாழ்வையும் நீர் கொடுப்பீர் என நம்புகிறேன். என் இருதயத்தில் வந்து உம் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும் இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.

மேலதிக விபரங்களுக்கு...

Rev. குகன்ராஜதுரை
கிழக்கிலங்கை சுவிஷேச பணி
மட்டக்களப்பு

# எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் #

# எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் #